
தேவையான பொருட்கள்:-
கருப்பட்டி 500 கிராம்
முட்டை 6
தேங்காய்ப்பால் - 1 கப் (இறுக்கமானது)
ஏலப்பொடி 1 தே.க
பட்டர் - 1 தே.க
செய்முறை:-
இறுக்கமான தேங்காய்ப் பாலில் கருப்பட்டியைச் சேர்த்துக் கரைத்து வடிக்கவும்.
முட்டையை நுரைவரக் கூடியதாக நன்கு அடிக்கவும்.
பின் கருப்பட்டிக் கரைசலுடன் முட்டைக்கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து நன்கு அடிக்கவும்.
ஏலத்தையும் சேர்த்துக் கொள்ளவும். பின் பட்டர் பூசிய பாத்திரத்தில் ஊற்றி நீராவியில் அவித்தெடுக்கவும்.
பாத்திரத்தின் மேல் பொலித்தீன் பேப்பரினால் மூடிக்கட்டி மணிநேரம் அவிக்கவும்.





