Iddiyappam



Recipes

Iddiyappam on tray
Iddiyappam on tray
Iddiyappam on tray
Iddiyappam on tray

றோல்ஸ்


தேவையான பொருட்கள்:-
 
உருளைக்கிழங்கு -  250 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 5 கிராம்
மஞ்சள்தூள், மிளகுத்தூள், உப்பு - அளவாக
கோதுமை மா - 2 சுண்டு
றஸ்க் தூள் - அளவாக
தே.எண்ணெய் -  ½  போத்தல்
 


செய்முறை:-
 

கிழங்கை அவித்து மசித்து மஞ்சள்தூள், மிளகுத்தூள், உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றைக்கலந்து கொள்ளவும்.


ஒன்றரைச்சுண்டு மாவில் உப்புக்கலந்து தண்ணீர் விட்டு மெல்லிய கரைசலாக்கவும்.


மிகுதி மாவையும் தண்ணீர் விட்டு தோய்க்கும் பதத்தில் கரைக்கவும்.


பின் தோசைக்கல்லில் எண்ணெய் பூசி மாக்கரைசலை அரைக் கரண்டியளவு எடுத்து மெல்லிய சிறு வட்டங்களாக வார்த்து வெந்ததும் எடுக்கவும்.


சூடாக இருக்கும் போதே அதனுள் கிழங்குக் கலவையை வைத்து உருட்டி மாக்கரைசலில் தோய்த்து றஸ்க் தூளிற் புரட்டவும்.


கொதித்த எண்ணெயில் பொன் நிறமாகப் பொரித்தெடுக்கவும்.
Call every where