
தேவையான பொருட்கள்:-
பட்டர் - 500 கிராம்
சீனி - 1 கிலோ
றவை - 400 கிராம்
கோதுமை மா 100 கிராம்
முட்டை - 25
முந்திரிகை வற்றல் - 1 கிலோ
முந்திரிகைப்பருப்பு- 500 கிராம்
சிறிய திராட்சை (கறன்ஸ்) - 500 கிராம்
பூசினி அல்வா - 500 கிராம்
இஞ்சிப் பாகு - 250 கிராம்
பேரிச்சம்பழம் - 250 கிராம்
சரிஸ்- 250 கிராம்
சவ்சவ்- 250 கிராம்
கன்டீட்பீல்- 250 கிராம்
ஸ்ரோரி ஜாம்- 1 போத்தல்
றோஸ் எசென்ஸ்- 1 போத்தல்
வனிலா - 1 போத்தல்
ஏலம், கராம்புத்தூள்- 1 மே.க
பிரண்டி- 1 வைன் கிளாஸ்
தேன் - 1 வைன் கிளாஸ்
கோல்டன் சிரப்- 1 போத்தல்
சாதிக்காய் - ½ பாதி
பேக்கிங் பவுடர் - 4 தே.க
ஆமென்ட் எசென்ஸ்- 1 போத்தல்
செய்முறை:-
முந்திரிகை வற்றல், முந்திரிகைப் பருப்பு, சிறிய திராட்சை, பேரிச்சம்பழம், இவற்றைக் கழுவி உலர்த்திய பின் எல்லாப் பழங்களையும் ஏனைய பிறிசேவ் வகைகளையும் சிறிய துண்டுகளாக வெட்டவும்.
பின் வெட்டிய பழங்கள், ஜாம், எசென்ஸ்வகைகள், வாசனைப்பொருட்கள், தேன், பிரண்டி யாவற்றையும் ஒன்று சேர்த்து 3 நாட்கள் பாத்திரத்திலிட்டு மூடிவைக்கவும்.
றவையை இலேசாக வறுத்து ஆறவைத்து அரைவாசி பட்டரைச் த்து ஒரு மணிநேரம் ஊறவிடவும்.
மிகுதி பட்டர், சீனியை நன்கு அடித்துக் கொண்டு மஞ்சட் கருவையும் சேர்த்து அடிக்கவும்.
முட்டை வெள்ளைக் கருவை நுரைவரக் கூடியதாக நன்கு அடிக்கவும்.
பட்டர் சீனிக்கலவை நன்கு மென்மையானதும் பேக்கிங் பவுடர் சேர்த்து அரிக்கப்பட்ட மா, றவை இவற்றைச் சேர்த்துக் கலந்து பழக்கலவையையும் முட்டை வெண் கருவையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து நன்கு கலந்து பேக் பண்ணிக் கொள்ளவும்.
குறிப்பு நீண்ட நாட்களுக்கு வைப்பதானால் பேக்பண்ணிய கேக்கைத் தூளாக்கிச் செய்தித்தாளின்மேல் பரவி இரண்டு கிழமைகள் வைத்துப் பின் விரும்பிய ஜாமைச் சேர்த்துப் பிசைந்து தட்டில் இட்டு அழுத்தமாக்கி வெட்டவும்.
மேலே தரப்பட்ட அளவுகளின்படி நீளம் 7cm அகலம் 3cm உயரம் 2cm கொண்ட 200 துண்டுகள் வெட்டலாம்.
றிச் கேக்கின் மேல் இடப்படும் ஆமென்ட் ஜசிங் 200 கேக் துண்டுகளுக்குப் போதுமான அளவு
தேவையான பொருட்கள்:-
ஐசிங் சீனி 400 கிராம்
முந்திஹ்ப்கைப்பருப்பு (கஜூ) 200 கிராம்
ஆமென்ட் எசென்ஸ்- 1 தேக்கரண்டி
முட்டை வெண்கரு- அளவாக
செய்முறை:-
முந்திரிப்பருப்பைச் சுத்தமாக்கி மாவாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த முந்திரிப்பருப்புடன் ஜசிங்சீனி, எசென்ஸ் இவற்றைக் கலந்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
இடையிடையே முட்டை வெண்கருவையும் சிறிது சிறிதாகச் சேர்த்துப் பசைத் தன்மையாக வரும்வரை பிசைந்து திரணையாக்கிக் கொள்ளவும்.
பின்பு அதனைச் சிறு உருண்டைகளாக்கிப் பலகையில் வைத்துமிக மெல்லிய தடிப்பமுள்ளதாக உருட்டிக் கொள்ளவும்.
அதன் பின்னர் துண்டுகளாக்குவதற்கு உரிய கட்டமிடப்பட்ட கேக் தட்டை உருட்டப்பட்ட ஜசிங்கின்மேல் (பலகையின் மேல்) வைத்து அமர்த்திக் கொள்ளவும்.
ஒவ்வொரு கட்டங்களுக்குள்ளும் உதிர்த்தி வைக்கப்பட்ட கேக்கை இட்டு அமர்த்தி அழுத்தமாக்கவும்.
இறுதியாகப் பலகையக் கவிழ்த்துக் கேக்தட்டை வேறாக்கவும்.
கட்டங்களுக்குள் அமர்த்தப்பட்ட கேக்துண்டுகளைத் தனித்தனியாக எடுத்துக் கொள்ளவும்.





