
தேவையான பொருட்கள்:-
உருளைக்கிழங்கு - 500 கிராம்
சீனி - 500 கிராம்
நெய் - 2 மே.க
முந்திரிப்பருப்பு - 25 கிராம்
வனிலா - 2 தே.க
தண்ணீர் - கப்
செய்முறை:-
கிழங்கை அவித்து உராய் கருவியில் உரோஞ்சிக் கொள்க.
சீனியைப்பாகு காய்ச்சிக் கம்பிப்பாகாக வரும்போது கிழங்குத் துருவலைச் சேர்த்துக் கொள்ளவும்.
இறுகும் பருவத்தில் நெய்யிற் பொரித்த முந்திரிப்பருப்பு நெய், வனிலா, இவற்றையும் சேர்க்கவும்.
திரளும் பருவத்தில் இறக்கி நெய் பூசிய தட்டிற் கொட்டி அழுத்திப் பரவவும்.
விரும்பினால் கலரிங் சேர்த்துக் கொள்ளலாம். வற்றாளை, மரவள்ளிக் கிழங்குகளிலும் இதே முறையைப் பின்பற்றலாம்.





