
தேவையான பொருட்கள்:-
உருளைக்கிழங்கு - 500 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 25 கிராம்
கோதுமை மா - 500 கிராம்
பட்டர் - 50 கிராம்
மிளகாய்த்தூள் - 2 தே.க
மஞ்சள்தூள் - 1 தே.க
கறிவேப்பிலை, உப்பு, பெருஞ்சீரகம், கடுகு - அளவாக
தே.எண்ணெய்- 1 போத்தல்
தண்ணீர் - அளவாக
செய்முறை:-
கிழங்கை அவித்து மசித்து மிளகாய்த்தூள், உப்பு இவற்றைக் கலந்து வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலையைத் தாழித்துக் கலவையைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
மாவுடன் பட்டர், உப்பு, மஞ்சள் தூள் கலந்து பட்டர் மாவுடன் நன்கு சேரும்படி நுனி விரல்களினால் பிசறி குளிர் நீரைக் கொஞ்சமாக தெளித்துக் கையில் ஒட்டாதபதத்தில் குழைக்கவும்.
மெதுமையாகும் வரை நன்கு அடித்துக் குழைக்கவும். பின் சிறுசிறு உருண்டைகளாகப் பலகையில் வைத்து உருட்டி மெல்லிய வட்டமாக்கி பற்றீஸ் அச்சில் வைத்து பின் கலவையை நடுவில் வைத்து அச்சினால் மூடவும். பின் அதனைப் பொன் நிறமாகப் பொரித்தெடுக்கவும்.





