
தேவையான பொருட்கள்:-
சீனி 1 கப்
நீர் - 1½ கப்
முட்டை 4
ஜெலற்றீன் - 1½ மே.க
வனிலா 1 தே.க
செய்முறை:-
சீனியை ஒரு கப் நீர் சேர்த்து நூற்பதம் வரை காய்ச்சி இறக்கவும்.
ஜெலற்றீனை ½ கப் நீரில் கரைத்துச் சீனிக்கரைசலுடன் கலக்கவும்.
முட்டை வெண்கருவை நன்றாக அடித்துக் கரைசல் ஆறிய பின் கலந்து பின் அடிக்கவும்.
கலவை தடிப்பாக வரும்வரை அடித்து வனிலாவையும் கலந்து குளிரூட்டியில் வைக்கவும்.





