
தேவையான பொருட்கள்:-
சீனி - 750 கிராம்
முட்டை - 12
றவை - 450 கிராம்
பட்டர் - 450 கிராம்
பூசினி அல்வா- 450 கிராம்
முந்திரிகைப்பருப்பு 750 கிராம்
ஏலக்காய்த்துஹ்ள்- 4 தேக்கரண்டி
கறுவாத்தூள்- 1/4 தேக்கரண்டி
சாதிக்காய்த்தூள்- 1/4 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 4 தேக்கரண்டி
வனிலா எசென்ஸ்- 2 தேக்கரண்டி
ஆமென்ட் எசென்ஸ்- 1 தேக்கரண்டி
றோஸ் எசென்ஸ்- 3 தேக்கரண்டி
செய்முறை:-
முட்டை வெண்கரு மஞ்சட் கருவை வெவ்வெறாக எடுத்துக் கொள்ளவும்.
எட்டு முட்டைகளின் வெண்கருக்களை நுரை வரக்கூடியதாக நன்கு அடித்துக் கொள்ளவும்.
முந்திரிப்பருப்பை மிகக் குறுணலாக வெட்டிக் கொள்ளவும்.
பூசினி அல்வாவையும் குறுணலாக வெட்டவும்.
றவையைத் துப்பரவு செய்து இலேசாக வறுத்துக் கொள்ளவும்.
முட்டை மஞ்சட் கருவுடன் சீனியைச் சேர்த்து நன்றாக அடிக்கவும்.
பட்டருடன் றவையைக் கலந்து நன்றாக அடிக்கவும்.
நன்கு அடிக்கப்பட்ட வெண்கரு, மஞ்சட்கருக் கலவையை றவை, பட்டர் கலவையுடன் சேர்க்கவும்.
அக்கலவையுடன் ஏலம், கறுவா, சாதிக்காய் தூள்களையும், வனிலா, ஆமென்ட் எசென்ஸ்சையும், றோஸ் எசென்சையும் பேக்கிங் பவுடரையும் கலக்கவும்.
கலந்த கலவையை பேக் பண்ணிக் கொள்ளவும்.





