Iddiyappam



Recipes

Iddiyappam on tray
Iddiyappam on tray
Iddiyappam on tray
Iddiyappam on tray

பழச்சலாது


தேவையான பொருட்கள்:-

அன்னாசிப்பழம்     - 1
மாம்பழம்         - 3
வாழைப்பழம்        - 6
பப்பாசிப்பழம்         - 1
எலுமிச்சம்பழம்     - 1
முந்திரிகைவற்றல்     - 50 கிராம்
முந்திரிப்பருப்பு     – 50 கிராம்

கஸ்ரட் கூழ் :-

கஸ்ரட் பவுடா - 2 தே.க
ரின்பால்     - 3 மே.க
சீனி         – 1 மே.க
நீர்         - ¼  கப்


செய்முறை:-
 
பழங்களைச் சுத்தம் செய்து விரும்பிய வடிவங்களில் சிறுசிறு துண்டுகளாக வெட்டி வேறுவேறாக வைத்துக் கொள்ளவும்.


ரின்பாலுடன் சீனியைச் சேர்த்துச் சிறிதளவு நீர் சேர்த்துக் காய்ச்சவும்.


இறுகும் பருவத்தில் கஸ்ரட்பவுடரை சிறிதளவு நீரில் கரைத்துச் சேர்த்துக் காய்ச்சி இறக்கி கலவையை ஆற விடவும்.


வெட்டிய பழங்களை ஒன்று சேர்த்து முந்திரிவற்றல், முந்திரிப்பருப்பு, எலுமிச்சம்புளி இவற்றையும் சேர்த்து கஸ்ரட் கூழையும் சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கிளறவும். (பழங்கள் சிதையாதவாறு கிளறவும்)


சிறிது நேரம் குளிரூட்டியில் வைத்துப் பின் எடுத்துப் பரிமாறலாம்.

Call every where