
தேவையான பொருட்கள்:-
மாஜரின் - 250 கிராம்
சீனி - 250 கிராம்
முட்டை - 5
கோதுமை மா - 150 கிராம்
ரவை - 100 கிராம்
முந்திரிகை வற்றல் - 200 கிராம்
முந்திரிப்பருப்பு - 200 கிராம்
கன்டீட்பில் - 100 கிராம்
சிறிய திராட்சை (கறன்ஸ்) - 200 கிராம்
ஜிஞ்சர் பிறிசேவ் - 100 கிராம்
பேக்கிங் பவுடர் - 3 தே.க
வனிலா - 2 தே.க
செய்முறை:-
பழவற்றல்களைக் கழுவிச் சுத்தம்செய்து சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
மாஜாரின் சீனியையும் சேர்த்து நன்கு அடிக்கவும். முட்டையையும் இடையே சேர்த்து அடிக்கவும்.
சீனி கரைந்ததும் பேக்கிங்பவுடர், மா, ரவை, வனிலா, பழவற்றல்கள், முந்தரிப்பருப்பு இவற்றைக் கலந்து கொள்ளவும்.
பேக் பண்ணும் பாத்திரத்துள் விட்டு அளவாக பேக் பண்ணிக் கொள்ளவும்.





