Iddiyappam



Recipes

Iddiyappam on tray
Iddiyappam on tray
Iddiyappam on tray
Iddiyappam on tray

மீன் கட்லட்


தேவையான பொருட்கள்:-
 
உருளைக்கிழங்கு - 500 கிராம்
மீன் ரின் - 1 (பெரியது)
வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 25 கிராம்
மிளகுதூள் - அளவாக
உப்புத்தூள் - அளவாக
முட்டை- 2
எலுமிச்சம் பழம் - ½ பாதி
றஸ்க் தூள் - தேவையான அளவு
தே.எண்ணெய் - 1 போத்தல்
 

செய்முறை:-
 
உருளைக்கிழங்கை அவித்து மசிக்கவும். மீனைச் சுத்தம் செய்து மீனில் உள்ள நீரைப் பிழிந்து எடுத்தபின் மீனை உதிர்த்துக் கொள்ளவும்.


குறுணலாக வெட்டிய வெங்காயம், மிளகாய், கிழங்கு இவற்றை மீன் கலவையுடன் கலந்து அதனுள் உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சம் புளி அளவாகச் சேர்த்துக் குழைத்து சிறு சிறு உருண்டைகளாக்கவும்.


அடித்த முட்டைக் கலவையுள் உருண்டைகளைத் தோய்த்து றஸ்க் தூளில் புரட்டி எடுத்துப் பொன் நிறமாக எண்ணெயிற் பொரித்தெடுக்கவும்.
Call every where