
தேவையான பொருட்கள்:-
ரின் பால் - ¾ ரின்
கோதுமை மா - 250 கிராம்
றவை - 250 கிராம்
மாஜரின் - 250 கிராம்
சீனி - 100 கிராம்
பேக்கிங் பவுடரி - 2 தே.க
வனிலா - 1 தே.க
முந்திரிகை வற்றல் - 50 கிராம்
செய்முறை:-
மாஜரினுடன் சீனியைச் சேர்த்து நன்கு அடிக்கவும். பின் ரின்பாலையும் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
பேக்கிங் பவுடர் சேர்த்து அரித்த மா, இலேசாக வறுக்கப்பட்ட றவை இவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
வனிலா, முந்திரிகை வற்றல் சேர்த்து பேக்பண்ணவும்.





