
தேவையான பொருட்கள்:-
பட்டர் - 500 கிராம்
சீனி - 500 கிராம்
றவை - 500 கிராம்
முட்டை - 8
பேரீச்சம்பழம் - 1 கிலோ
பேக்கிங் பவுடர் - 4 தே.க
வனிலா - 2 தே.க
முந்திரி வற்றல் - 100 கிராம்
தேயிலைச் சாயம் (தடிப்பானது) - 2 கப்
செய்முறை:-
பேரீச்சம்பழத்தைக் கழுவி விதை நீக்கி மிகச் சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்திலிட்டு தேயிலைச் சாயத்தை விட்டு 7 8 மணிநேரம் ஊறவைக்கவும்.
பட்டரையும் சீனியையும் சேர்த்து நன்கு அடிக்கவும்.
முட்டையையும் இடையே ஒவ்வொன்றாகச் சேர்த்து அடிக்கவும்.
றவையுடன் பேக்கிங் பவுடரைச் சேர்த்துக் கலவைக்குள் சேர்க்கவும் பின் ஊறவைத்த பேரீச்சம்பழம், முந்திரிவற்றல், வனிலா இவற்றைச் சேர்த்து நன்கு கலக்கியபின் பேக் பண்ணவும்.





