
தேவையான பொருட்கள்:-
முட்டை - 5
ரின் பால் - 1 ரின்
சீனி - 2 மே.க
வனிலா - 1 தே.க
செய்முறை:-
முட்டையை நன்கு அடிக்கவும். பின் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு நன்கு அடித்து வனிலாவையும் சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சீனியைப் போட்டுப் பொன்னிறமாக வரும்வரை சூடேற்றவும்.
அக் கரமலைப் பாத்திரத்தின் உட்பாகம் முழுவதும் பரவிப்பூசி அப் பாத்திரத்திலேயே கலவையை ஊற்றி நீராவியில் அவித்தெடுக்கவும்.
பாத்திரத்தின் மேல் பொலித்தீன் பேப்பரினால் மூடிக்கட்டி அவிக்கவும்.





