
தேவையான பொருட்கள்:-
பிஸ்கட் - 250 கிராம்
பட்டர் - 250 கிராம்
சீனி - 250 கிராம்
முட்டை - 2
பால் - ½ கோப்பை
வனிலா - 1 தே.க
கொக்கோ பவுடர் - அளவாக
முந்திரிப்பருப்பு - அளவாக
செய்முறை:-
பட்டரையும் சீனியையும் நன்றாக அடிக்கவும். முட்டையும் சிறிது பாலையும் அதனுடன் சேர்த்து அடித்து வனிலாவையும் கொக்கோப் பவுடரையும் சேர்க்கவும்.
விரும்பினால் கலவையை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதிக்கு கொக்கோ பவுடரும், மற்றைய பகுதிக்கு விரும்பிய நிறத்தையும் சேர்க்கலாம்.
பின் ஒரு பாத்திரத்தின் அடியில் பிஸ்கட்டைப் பரவலாக அடுக்கவும். (கிறீம் இல்லாத பிஸ்கட் உகந்தது)
அதன் மேல் சிறிது பாலைப் பரவலாக ஊற்றி அதற்கு மேல் கிறீம் கலவையை ஊற்றிப் பரவி விடவும்.
பின் திரும்பவும் பிஸ்கட்டை அடுக்கிப் பாலை விட்டு கிறீம் கலவையை ஊற்றிப் பரவவும்.
இவ்வாறே மாறிமாறிக் கலவை முடியும் வரை செய்து அதன் மேலே ஒடித்த முந்திரிப்பருப்பைத் தூவிக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து இறுகியதும் எடுத்துக் கொள்ளவும்.





