தேவையான பொருட்கள்:-
கடலைப்பருப்பு 500 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
ப.மிளகாய் - 25 கிராம்
பெருஞ்சீரகம் - 2 தே.க
உப்பு அளவாக
கறிவேப்பிலை அளவாக
தே.எண்ணெய் - 1 போத்தல்
செய்முறை:-
கடலைப்பருப்பை ஊறவைத்து அரைக்கவும். (பட்டாக அரைக்க வேண்டியதில்லை)
குறுணலாக வெட்டிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, பெருஞ்சீரகம், உப்பு இவற்றைச் சேர்த்து நன்றாகக் குழைக்கவும்.
அளவான உருண்டைகளாக்கிக் கொதித்த எண்ணெயில் பொன் நிறமாகப் பொரித்தெடுக்கவும்.





